fbpx

16 வயது சிறுமி பலாத்காரம்..!! வீட்டில் கிடந்த முதியவரின் சடலம்..!! நடந்தது என்ன..? அதிர்ச்சி தகவல்..!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குப்பண்ணா (73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாடியில் காய போட்டிருந்த துணியை எடுக்கச் சென்ற 16 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். அதன்பிறகு சிறுமியை காணாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். பின்னர், குப்பண்ணாவின் வீட்டில் சிறுமி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்று பார்த்தபோது சிறுமியை குப்பண்ணா பாலியல் பலாத்காரம் செய்தது அம்பலமானது.

16 வயது சிறுமி பலாத்காரம்..!! வீட்டில் கிடந்த முதியவரின் சடலம்..!! நடந்தது என்ன..? அதிர்ச்சி தகவல்..!!

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் முதியவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இந்நிலையில் மறுநாள் காலை முதியவர் வீட்டுக்குள் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முதியவரின் மீது பாலியல் பலாத்காரம் செய்த வழக்கும், சிறுமியின் உறவினர்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் அதிரடி மாற்றம்..!! யார் யாருக்கு எந்தெந்த துறை..? முழு விவரம் உள்ளே..!!

Wed Dec 14 , 2022
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து எந்ததெந்த துறை யார் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். தமிழ்நாடு அமைச்சரவையில் 10 அமைச்சர்களின் இலாகாக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சில அமைச்சர்களிடம் இருந்த துறைகள் பறிக்கப்பட்டு மற்ற அமைச்சர்களுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை அமைச்சராக […]

You May Like