fbpx

300 கி.மீ. வேகத்தில் பறந்த பி.எம்.டபள்யு கார் ! த்ரில்லிங் டிரைவிங்கில் 4 பேர் பலி !!

உத்தரபிரதேச மாநிலத்தில் கன்டெய்னர் லாரியை முந்த அதிவேகத்தில் பறந்து சென்ற பி.எம்.டபள்யு கார் விபத்தில் சிக்கி 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு மருத்துவர் , டாக்டர் என 4 பேர் பிஎம்டபள்யு காரில் பயணித்துள்ளனர். தனியார் மருத்துவக்கல்லூரியில் பணிபுரிகின்றார் பேராசிரியரான டாக்டர்ஆனந்த் பிரகாஷ் . இவருடன் சேர்த்து மொத்தம் 4 பேர் சென்றனர். இவர்கள் முன்னாள் சென்ற வாகனத்தை முந்த மற்ற நபர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். வேகமாக செல் , வேகத்தை 300ஆக்கு என பேஸ்புக்கில் லைவாக டெலிகாஸ்ட் செய்தனர்.

முன்னாள் சென்ற கன்டெய்னரின் சக்கரத்தில் சிக்கி வாகனம் நசுங்கியது. உடல்கள் சிதைந்த நிலையில் வாகனமும் உருக்குலைந்தது. 4 பேருக்கும் 30 வயதுக்குள் இருக்கும் என கூறப்படுகின்றது. டெல்லிக்கு அவர்கள் சென்று கொண்டிருந்தபோதுதான் விபத்து நடந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்டெய்னர் லாரி தப்பி ஓடிய நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். அனைத்து தரப்பிடம் இருந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரின் தொழில்நுட்ப ஆய்வு தடயவியல் மாநில ஆய்வக உதவியோடு செய்யப்படும் எனவும் அதிகாரி கூறினார்.

ஆனந்த் பிரகாஷின் மாமா கூறுகையில் , தனியார் கல்வி நிறுவன உரிமையாளர் ஒருவரிடம் இருந்து காரை வாங்கியுள்ளார். சமீபத்தில்தான் கார் வாங்கினார். அந்த மகிழ்ச்சி தங்குவதற்குள்ளாகவே இப்படி ஆகிவிட்டது. என்றார்.

தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமான விபத்துக்களைக் கவனத்தில் கொண்டு சாலைப் பாதுகாப்பு பணிகள் முடிவதற்குள் திட்டங்களுக்கு சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் முன்னிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Post

16 வயது காதலால்.. பறிபோன சிறுமியின் உயிர்.! திகிலூட்டும் திருப்பூர் சம்பவம்.!

Mon Oct 17 , 2022
திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியில் ரமேஷ் குமார் என்பவருக்கு 16 வயதில் மகள் இருந்துள்ளார். அவிநாசியில் இருக்கும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அந்தப் பெண் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதை பகுதியில் இருக்கும் ஆண்கள் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவருடன் சிறுமிக்கு காதல் ஏற்பட்டது. இந்த விஷயம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், அந்த மாணவியை கண்டித்து வெகு தூரத்தில் இருக்கும் வேறொரு பள்ளியில் சேர்த்து […]

You May Like