டெல்லியில் வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் உள்ள தனியார் சுகாதார மையத்தில் மருத்துவ சிகிச்சை கட்டணம் அதிகரித்துள்ளதால் மக்களால் பரிசோதனைகள் நடத்த முடியாமல் இருக்கின்றன. அதனால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 450 வகையான மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படும்.

இவ்வசதிகள் அனைத்தும் டெல்லி மக்களுக்கு மேலும் பயன் உள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.