fbpx

ஒரு ஆணுக்காக 5 பெண்கள்..!! நடுவீதியில் குடுமிப்பிடி சண்டை..!! வைரல் வீடியோ

பீகாரில் ஒரு ஆணுக்காக 5 பெண்கள் நடுவீதியில் குடுமிப்பிடி சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் சோன்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பலே மன்மதராக இருந்திருக்கிறார் போல. இவர் ஒரே சமயத்தில் பல்வேறு பெண்களை காதலித்து வந்துள்ளார். ஆனால், ஒருவரை காதலிப்பது மற்றொருவருக்கு தெரியாமல் மெயிண்டெயின் செய்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று அந்த ஊரில் நடந்த பொருட்காட்சி ஒன்றிற்கு தன் காதலிகளில் ஒருவரை அழைத்துச் சென்றுள்ளார். இவர்கள் ஜோடி போட்டுக் கொண்டு போவதை இளைஞரின் மற்றொரு காதலி பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அந்த இளைஞரை மடக்கி பிடித்து வாக்குவாதம் செய்துள்ளார்.

ஒரு ஆணுக்காக 5 பெண்கள்..!! நடுவீதியில் குடுமிப்பிடி சண்டை..!! வைரல் வீடியோ

இளைஞரிடம் அந்த பெண் வாக்குவாதம் செய்வதை பார்த்த 3-வது காதலி இந்த பெண்ணிடம் வந்து சண்டை போட தொடங்கியுள்ளார். இப்படியாக இளைஞரின் 5 காதலிகள் ஒரே இடத்தில் கூடியதால் இளைஞர் யாருக்கு என்று அவர்களுக்குள் ட்விஸ்ட் ஆகி சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். தலைமுடியை பிடித்து இழுத்து அவர்கள் சண்டை போடுவதை சுற்றி இருந்தவர்கள் வீடியோ எடுத்த நிலையில் அது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Chella

Next Post

மக்களே...! வரும் 8-ம் ஆதார் எண்ணுடன் இணைக்கலாம்...! மேலும் கால அவகாசம் நீடிப்பு...!

Thu Dec 1 , 2022
வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது 8-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணைப்‌ படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில்‌, தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில்‌ அடங்கியுள்ள 12,29,285 மொத்த வாக்காளர்களில்‌ 81.49 சதவீதம்‌, […]

You May Like