fbpx

7-வது ஊதியக்குழு : மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய அகவிலைப்படி….

மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படியை 7வது ஊதியக்குழு அறிவித்துள்ளது. இது பற்றி இன்று வெளியான தகவலை பார்க்கலாம்.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இது வருமானத்துடன் சேர்த்தே வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான தகவல் சமீபத்தில் வெளியானது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜூலை 1 ,2022 ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு வழங்கப்படும். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 8ம் தேதி ஓய்வூதியம் , ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் அகவிலைப்படி அதிகரித்துள்ளது பற்றி தெரிவித்துமகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளது. அதுவும் 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக அதிகரித்ததற்கு மகிழ்ச்சியும் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பணவீக்கத்தால் சிரமப்படும் மாத ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் நோக்கத்தில் அகவிலைப்படி நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளது. 7வதுஊதியக்குழு பரிந்துரைத்தபடி கணக்கீடு மேற்கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய தகவல் :

அகவிலைப்படி உயர்வால் யாருக்கு பயன் ? –திருத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி உயர்வு கீழ்கண்ட பிரிவுகளின்படி ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

1)பொதுத்துறை மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் , மத்திய அரசின் தன்னாட்சி அமைப்புகளின் கீழ் ஓய்வூதியம் பொறுவோர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். 23.06.2017 க்குப் பின் 15 ஆண்டுகள் பணிக்காலம் முடிந்த பின்னர் முழு ஓய்வூதியத்தை மீட்டெடுக்க ஆயுதப்படை ஓய்வூதியம் பெறுவோர் , சிவில் ஓய்வூதியம் பெறுவோம் , பாதுகாப்புசேவையினர், அனைத்திந்திய ஓய்வூதியதாரர்கள், ரயில்வே ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் , பர்மா சிவிலியன் ஓய்வூதியதாரர்கள் , புலம்பெயர்ந்த பாகிஸ்தான் அரசு ஓய்வூதியதாரர்களுக்குபொருந்தும்

2) இந்த அகவிலைப்படி தொகை குறைந்த அளவில் ஊதியம் பெறுபவர்களுக்கு அடுத்த அதிகப்படியான தொகையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டிருக்கும்.

3) நீதிபதிகளுக்கு தனி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தேவையான உத்தரவு துறையில் இருந்த பிறப்பிக்கப்படும்.

யார் கணக்கிடுவார்கள்? ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் இந்த தொகை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அலுவலக குறிப்பாணை குறிப்பிட்டுள்ளபடி ஊதியம் வழங்கும் அதிகாரிகள் , தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொறுப்பு அதிகாரிகள் இந்த கணக்கை கணக்கிட்டு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

கனடா செல்ல ஆசையா! மருத்துவர்கள் நிரந்தர குடியுரிமை பெறலாம்….

Sun Oct 9 , 2022
மருத்துவர்கள் கனடா நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான வழிவகைகளை அந்நாடு மிகவும் எளிதாக்கியுள்ளது. கனடா நாட்டில் குடியுரிமை பெறுவதற்கு அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். உயர்கல்வி பயில , சிறந்த நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் பணியில் சேர ஐ.டி.ஊழியர்கள், செவிலியர்கள் , மருத்துவத்துறையினர் உள்ளிட்ட பல துறையினரும் விரும்புகின்றனர். ஆனால் , எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டத்தின் மூலம் தகுதிபெறுவது மருத்துவர்களுக்கு சவாலாக இருந்தது. தகுதிவாய்ந்த மருத்துவர்கள் கனடா நாட்டில் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே […]

You May Like