மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி ஆல்-மகர்பட்டா சிட்டி கேரம் போட்டியின் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும், ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இந்த நிலையில், அவர் இளம் வயது கேரம் விளையாட்டு ஆர்வலர்களுடன் இணைந்து அவர் விளையாடிய வீடியோவை அவரது பேரன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

புனேவின் ஆல்-மகர்பட்டா சிட்டி கேரம் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கம் மற்றும் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற எனது 83 வயதான ஆஜியால் ஈர்க்கப்பட்டேன் என அவர் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவை அக்ஷய் மராத்தே ஜனவரி 8 ஆம் தேதி பகிர்ந்துள்ளார். இதற்கு அவரின் நண்பர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலர் லைக்குகளையும், கமென்ட்களையும் தெரிவித்து வருகின்றனர்.