9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பிளேடால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் ரயில் நிலையம் அருகே 9 வயது சிறுமியின் சடலம் அரை நிர்வாண நிலையில், கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் இருந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில், 15 வயது சிறுவனை விசாரணை மேற்கொள்ள அவரது குடியிருப்பு பகுதிக்கு சென்றனர்.
அப்போது சிறுவனின் பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததால் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் தந்தைக்கும், சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிறுமியின் தந்தை சிறுவனை தாக்கியுள்ளார். இதனால் கடும் கோபத்தில் இருந்த அந்த சிறுவன், அவரை பழிவாங்க மகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். சம்பவத்தன்று சிறுமியை கடத்தி, ஆள் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று, அங்கு வைத்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இதை வெளியில் சொல்லிவிடுவார் என்ற பயத்தில் தான் வைத்திருந்த பிளேடை கொண்டு அவரது கழுத்தை அறுத்துள்ளார். இதையடுத்து, பாலியல் வன்கொடுமை, கொலை, போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.