மஹாராஷ்டிராவில் அரசு பேருந்து தீப்பிடித்த நிலையில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில்இருந்து யவாத்மால் என்ற பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து அவுரங்காபாத்தை நெருங்கியது. அப்போது பேருந்தின் எஞ்சினில் திடீரென புகை வந்துள்ளது. இதை கவனித்த பேருந்து ஓட்டுனர் பயணிகளை விரைவாக கீழே இறங்க அறிவுறுத்தினார்.
உடனடியாக அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்த நொடியே திகு திகுவென தீபபிடித்து எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் ஓட்டுனர் சாதுர்யமாக செயல்பட்டதால் பயணிகள் காயமின்றி தப்பினர். ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் தீவிபத்தில் சிக்கியிருக்க நேரிடும் என்று பயணிகள் தெரிவித்தனர். இந்த விபத்தால் பயணிகள் பீதியடைந்தனர்.
https://www.instagram.com/reel/CkcbOF5IqEP/?utm_source=ig_web_copy_link
இது தொடர்பாக புனே போக்கவரத்து பிரிவு மேலாளர் கூறுகையில் ’’ ஓட்டுனர் சாதுர்யமாக செயல்பட்டுள்ளார். எஞ்சினில் புகை வந்ததும் பேருந்தில் இருந்த பயணிகள் விரைவாக வெளியேற்றப்பட்டனர். டிரைவரும் இறங்கினார். அவுரங்காபாத் அருகே சாஸ்திரி நகர் அருகே வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து 3 வாகனங்களில் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பாதி பேருந்து முழுவதுமாக எரிந்தது.