fbpx

பணத்தை திருடியதாக பரபரப்பு புகார்..!! 5ஆம் வகுப்பு சிறுமிக்கு செருப்பு மாலை..!! விடுதி காப்பாளர் செய்த காரியம்..!!

ரூ.400 பணத்தை திருடியதாக கூறி 5ஆம் வகுப்பு சிறுமிக்கு முகம் முழுவதும் கருப்பு மையை பூசி செருப்பு மாலை அணிவித்து விடுதியை சுற்றிவர வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் பெட்டூல் மாவட்டத்தில் உள்ள டம்ஜிபுரா கிராமத்தில் ஒரு அரசுப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் விடுதி வளாகத்தில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். அந்த வகையில், விடுதியில் தங்கி படித்து வரும் 5ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சக மாணவி ஒருவர் வைத்திருந்த ரூ.400 பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதனால், விடுதியின் பெண் காப்பாளர் 5ஆம் வகுப்பு சிறுமிக்கு முகம் முழுவதும் கருப்பு மையை பூசி பேய் போல் அலங்கரித்து செருப்பு மாலை அணிவித்து விடுதியை சுற்றிவர வைத்துள்ளார்.

பணத்தை திருடியதாக பரபரப்பு புகார்..!! 5ஆம் வகுப்பு சிறுமிக்கு செருப்பு மாலை..!! விடுதி காப்பாளர் செய்த காரியம்..!!

இந்நிலையில், சிறுமியின் தந்தை விடுதியில் சென்று தன் மகளை பார்த்தபோது தனக்கு நடந்த கொடுமைகளை தந்தையிடம் சிறுமி கூறி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட பெண் விடுதிக் காப்பாளரை பணியில் இருந்து நீக்கம் செய்ததோடு, விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஒன்றரை வயது குழந்தையை பலாத்காரம் செய்த தந்தை..!! பிறப்புறுப்பில் ரத்தக்காயம்..!! மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்..!!

Wed Dec 7 , 2022
தனது ஒன்றரை வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது. திருச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் (31) என்பவர், கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் தினந்தோறும் கஞ்சா மற்றும் மதுபோதையில் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டவரென சொல்லப்படுகிறது. இவருக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் ஒருநாள் இரவு இவர் தன் குழந்தையின் […]

You May Like