ஒரு தலையாக இளம்பெண்ணை காதலித்துவந்த நிலையில் தனது காதலை வெளிப்படுத்தியபோது ஏற்றுக் கொள்ள மறுத்ததால் இளம்பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியில் வசித்து வந்தவர் வினோத் -பிந்து தம்பதி . இவர்கள் இருவருக்கும் விஷ்ணுபிரியா என்ற மகள் உள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் இளம்பெண் விஷ்ணு பிரியாவும் அதே பகுதியைச் சேர்ந்த ஷியாம் ஜித் என்பவர் இருவரும் நண்பர்களாக பழகினர்.
ஆனால் ஷியாம் ஜித்துக்கு விஷ்ணுபிரியா மீது காதல் இருந்துள்ளது.
அதை வெளிப்படுத்த நினைத்த ஷியாம் அவரிடம் நேரடியாக காதலை தெரிவித்துள்ளார். ஆனால் , நான் உன்னை நண்பனாகத்தான் பார்த்தேன் என தெரிவித்து காதலை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷியாம் ஜித் அங்கிருந்த சுத்தியலை எடுத்து தலையில் அடுத்தடுத்து தொடர்ந்து தாக்கியுள்ளார். அப்பெண் மயங்கி விழுந்துள்ளார்.
அப்போதும் அவருக்கு ஆத்திரம் தீரவில்லை கையில்இருந்த கத்தியை வைத்து கழுத்தைஅறுத்துள்ளார். கால்களை தனித்தனியாக இரண்டு துண்டுகளாக்கியுள்ளார். அதன் பின் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த விஷ்ணுபிரியாவை கண்ட அவரது தாய் தகறினார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து விரைந்துவந்து சோதனை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர்.
செல்போனை ஆராய்ச்சி செய்தபோது கடைசியாக பேசிய நபர் ஷியாம் ஜிம் என்பதும் அவர் சில நொடிகள் மட்டும் பேசிவிட்டு துண்டித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் காதலை தெரிவித்தபோது அவர் சம்மதிக்காததால் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்டிது போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரு தலை காதலால் சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.