fbpx

6 பேரால் 4 மணி நேரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்.. கணவரின் கண் முன்னே நடந்த கொடூரம்..

ஜார்கண்டில் 22 வயது பெண் ஒருவர் தனது கணவர் முன் சுமார் நான்கு மணி நேரம் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

ஜார்கண்ட் மாநிலம் பலாமுவில் உள்ள சத்பர்வா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகோரியா-பால்வாஹி கிராமத்திற்கு அருகே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. தனது மாமனார் – மாமியாருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அப்பெண் சனிக்கிழமை தனது தாய்வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அப்பெண்ணின் மாமியார் அவரை சமாதானம் செய்து அழைத்து வர முயன்றுள்ளார்.. ஆனால் அப்பெண் தனது கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டார்..

இதனால் தனது மகனை அழைத்து, அப்பெண்ணை அவரின் தாய் வீட்டில் விட்டு வரும் படி கூறியுள்ளார்.. பாரி கிராமத்தில் வசிக்கும் தனது மைத்துனர் நரேஷ் குமாரை தனது மாமியார் வீட்டில் பைக்கில் விடுவதற்காக அந்த கணவர் அழைத்துள்ளார். இரவு 8 மணியளவில் மூவரும் பலுவாஹியை அடைந்தபோது, ​​​​6 பேர் அவர்களைப் பிடித்து, அவர்களின் மொபைல் போன்களைப் பறித்து, அவர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் அந்த கும்பல், அப்பெண்ணை சுமார் நான்கு மணி நேரம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்பெண்ணின் கணவரின் கண் முன்னே இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது..

பின்னர், அப்பெண்ணின் கணவரை அங்கேயே விட்டு விட்டு, அந்த பெண்ணையும் நரேஷ்குமாரையும் கட்டாயப்படுத்தி பைக்கில் ஏற்றி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.. பைக்கில் சென்ற அப்பெண் சத்வாடி கிராமத்தில் தன்னை காப்பாற்றும் படி அலறத் தொடங்கி உள்ளார்.. அலறல் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த கிராம மக்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதற்கிடையில் அந்த பெண்ணின் கணவர் சனிக்கிழமை இரவு மாணிக்க காவல் நிலையத்திற்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார். சத்வாதி கிராமத்தில் வசிப்பவர்கள் இந்த சம்பவம் குறித்து மாணிக்கா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.. இதையடுத்து பகோரியா கிராமத்தைச் சேர்ந்த போலா ராம் மற்றும் தர்மேந்திர ராம் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்..

Maha

Next Post

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்..!! அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு..!! முதல்வர் முக.ஸ்டாலின் அதிரடி

Mon Sep 26 , 2022
ஆன்லைன் ரம்மி அவசர சட்டம், சட்டமன்ற கூட்டம் உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் 8-வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 7-வது அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஒரு மாத காலத்திற்குள்ளாக அடுத்த அமைச்சரவைக் கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. முந்தைய அமைச்சரவைக் கூட்டங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிலையில், […]

You May Like