டெல்லி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனதுல்லா கானின் வீட்டிற்கு நேற்று முன்தினம் சோதனை செய்ய சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை அமனதுல்லா கானின் வீட்டில் இருந்தவர்கள் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
வக்பு வாரிய வழக்கு தொடர்பாக ஜாமியா நகரில் இருக்கும் அமனதுல்லா கானின் வீட்டில் சோதனை செய்ய போன போது, எம்.எல்.ஏவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகாரியை தாக்கியதாக, வீடியோ ஆதாரங்களுடன் கோர்ட்டில் தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஜாமியா நகர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.