பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 ஆர்டர் செய்த ஒரு நபருக்கு ஐபோன் 14 டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கிக் வருகின்றனர். அந்த வகையில், கடந்த காலங்களில் விலை உயர்ந்த செல்போன், லேப்டாப் ஆர்டர் செய்த சிலருக்கு அதற்கு பதிலாக சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். இந்நிலையில், Flipkart நிறுவனத்தில் ஐபோன் 13 போன் ஆர்டர் செய்த நபருக்கு, ஐபோன் 14 டெலிவரி செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, மகாராஷ்டிராவைச் சேர்ந்த அந்த நபர் பிளிப்கார்ட் நிறுவனத்தில் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடியை பயன்படுத்தி ஐபோன் 13 ஆர்டர் செய்துள்ளார். அதற்காக அவர் ரூ.49,000 செலுத்தியுள்ளார். இந்நிலையில், அவருக்கு வந்த ஆர்டர் பார்சலை பிரித்து பார்த்த போது அதில் ஐபோன் 14 டெலிவரி செய்யப்பட்டிருந்தது. இது அவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐபோன் 14 வகை iphone 13-ஐ போன்ற இருப்பதாக பலரும் கூறிவந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதே சமயம் ஐபோன் 13-க்கும் 14க்கும் இடையே உள்ள வித்தியாசம் பல ஆயிரம் என்ற காரணத்தினால் இந்த நபருக்கு அதிர்ஷ்டம் அளித்திருப்பதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர்.