fbpx

புதிய தலைமைச் செயலகத்திற்கு அம்பேத்கர் பெயர்..! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட உள்ளதாக முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில், புதிய நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சட்ட மேதை அம்பேத்கர் பெயரை சூட்டக்கோரி தெலங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை மந்திரி கே.டி.ராமாராவ் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று அவர் கூறினார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய தலைமைச் செயலகத்திற்கு அம்பேத்கர் பெயர்..! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

ஆனால், தெலங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்டாமல் ஒன்றிய அரசு கட்டும் நடாளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும் என்று கூறுவதா? என அம்மாநில பாஜவினர் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில், தெலங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.

Chella

Next Post

2100-ல் சென்னையின் 16% பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம்.. பகீர் தகவல்..

Fri Sep 16 , 2022
2100-ல் சென்னையின் 16% பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரித்து, பனிப்பாறைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் என்பது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. இதனால் பல கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால், காலநிலை மாற்றம் முன்னெப்போதையும் விட இப்போது பேராபத்தாக மாறியுள்ளது.. எனவே நமது சுற்றுச்சூழலில் ஏற்படும் கடுமையான மாற்றங்களை காணும் […]

You May Like