fbpx

89 வயதிலும் தீராத காமவெறி.. கணவரின் செக்ஸ் டார்ச்சரில் இருந்து தப்பிக்க ஹெல்ப்லைன் உதவியை நாடிய மூதாட்டி..

89 வயதான தனது கணவரின் செக்ஸ் டார்ச்சரில் இருந்து தப்பிக்க, 87 வயதான மூதாட்டி அபயம் என்ற நிறுவனத்தின் ஹெல்ப்லைனின் உதவியை நாடி உள்ளார்..

குஜராத்தின் வதோதரா அருகே உள்ள சயாஜிகஞ்ச் என்ற பகுதியை சேர்ந்த வயதான தம்பதியினர் தங்கள் மகன், மருமகளுடன் வசித்து வருகின்றனர்.. இந்த வயதான தம்பதி பல ஆண்டுகளாக ஆரோக்கியமான உடலுறவை கொண்டிருந்தனர், ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்ததால் நிலைமை மோசமடைந்தது. உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும் உடலுறவுக்கு கணவர் வற்புறுத்தி உள்ளார்.. அதற்கு சம்மதிக்கவில்லை எனில் வெறிப்பிடித்தை போல் தன்னை திட்டுவார் என்றும், பொருட்களை தூக்கிப் போட்டு உடைப்பார் என்றும் கூறி உள்ளார். இதனால் அபயம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியை அவர் நாடி உள்ளார்.. அபயம் அமைப்பின் ஹெல்ப்லைன் நம்பருக்கு போன் செய்து தனது பிரச்சனையை மூதாட்டி விவரித்துள்ளார்..

இதையடுத்து, அபயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் குழுவினர் அவரது வீட்டிற்கு வந்து ஆலோசனை நடத்தினர். யோகா செய்வது, ஆன்மீக தலங்களுக்கு செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் செக்ஸ் போதையை கட்டுப்படுத்தலாம் என்று அறிவுரை வழங்கி உள்ளனர்.. மேலும் அவரை கவுன்சிலிங்கிற்கு அழைத்து செல்லும் படி குடும்பத்தினரிடம் அறிவுறுத்தி உள்ளனர்.. அவரது நடத்தையைக் கண்டறிய பாலியல் நிபுணரை அணுகுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அந்த முதியவர் யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.. தற்போது அவர் படிப்படியாக செக்ஸ் போதையில் இருந்து விடுபட்டு வருவதாக கூறப்படுகிறது..

செக்ஸ் போதை என்றால் என்ன? நிபுணர்களின் கூற்றுப்படி, செக்ஸ் போதை என்பது உடலுறவுக்கான கட்டாயத் தேவையாகும்.. செக்ஸ் போதைக்கு அடிமையானவர்கள், வாழ்க்கையை மோசமாக்கும் பாலியல் எண்ணங்கள், ஆசைகள், மற்றும் நடத்தைகள் ஆகியவை ஆகும்… பாலியல் அடிமைத்தனம் உள்ள ஒருவரால் பல எதிர்மறையான விளைவுகள் இருந்தாலும், அவர்களின் நடத்தையை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்.

Maha

Next Post

’இனி என் அறக்கட்டளைக்கு யாரும் பணம் தர வேண்டாம்’..! பகீர் கிளப்பிய ராகவா லாரன்ஸ்..!

Wed Sep 14 , 2022
’தனது அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம்’ என நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், இப்படத்திற்காக தனது உடலை மெருகேற்றி பார்ப்பதற்கு ஃபிட்டான லுக்கில் இருக்கிறார். இந்நிலையில், ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இதுவரை தனது அறக்கட்டளைக்கு நன்கொடைகள் வழங்கி வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், இனி யாரும் எனது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டாம் […]
’இனி என் அறக்கட்டளைக்கு யாரும் பணம் தர வேண்டாம்’..! பகீர் கிளப்பிய ராகவா லாரன்ஸ்..!

You May Like