2023 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியை கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்த நிலையில், ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி வாகை சூடியது. கடைசி பந்து வரை திரில்லாக சென்ற இப்போட்டியில், சென்னை அணி வீரர் ஜடேஜா பவுன்டரி அடித்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். 25 பந்துகளில் 47 ரன்கள் விளாசி சென்னை அணியின் வெற்றிக்கு அடித்தளம் போட்ட டிவோன் கான்வே ஆட்டநாயகனாக தேர்வானார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பை வென்று மகுடம் சூடிய அணி என்ற சாதனையை சென்னை நிகழ்த்தியுள்ளது.
வெற்றிக் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஸ்டேடஸ் வைத்தும், புகைப்படங்களை பகிர்ந்தும் உற்சாகத்தை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஐபிஎல் போட்டிகளை குறிப்பிட்டு ஸ்விகி நிறுவனம் பதிவிட்ட ஜாலியான ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்விகி நிறுவனம் பிரபல ஆணுறை (Condom) விற்பனை நிறுவனமான டியூரெக்ஸ் நிறுவனத்தை டேக் செய்து இந்த ட்வீட்டை பதிவுள்ளது. அதில், இன்றைக்கு நாங்கள் 2,423 ஆணுறைகளை டெலிவரி செய்துள்ளோம். இன்றிரவு களத்தில் 22 வீரர்கள் அல்ல, அதற்கும் மேல் நிறைய பேர் இருக்கிறார்கள் போல தெரிகிறது எனக் கூறி டியூரெக்ஸ் இந்தியா நிறுவனத்தை டேக் செய்துள்ளது.
இந்த ட்வீட் டிரெண்டாகி அதிக லைக் மற்றும் கமெண்டுகளை பெற்று வருகிறது. இந்த 2,423 வீரர்களும் பாதுகாப்பாக விளையாடுகிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது என ஒரு நபர் ஸ்விக்கியின் ட்வீட்டுக்கு கிண்டலாக பதிவிட்டுள்ளார்.