இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் வெடி வெடிக்க கூடாது என விதிமுறை விதிக்கப்பட்டிருந்தும் விதிகளை மீறினால் கூட மன்னித்துவிடலாம். இப்படிஅட்டூழியம் செய்த மும்பையன்ஸை போலீசார் மன்னிக்கமாட்டார்கள்.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது . இதை ஒட்டி பட்டாசு, வாண வேடிக்கைகள் என மக்கள் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இந்நிலையில் மும்பை அருகே தானேவில் ஒருவர் பட்டாசு வெடித்தது அனைவருக்கும் இடையூறை ஏற்படுத்தியது.
அடுக்குமாடி கட்டிடத்தின் ஜன்னல்கள் , பால்கனி என அப்பார்ட்மென்ட்டின் ஒவ்வொரு பகுதியாக டார்கெட் செய்து ராக்கெட் ஏவுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. போலீசார் அந்த வீடியோவில் இருந்த நபர் யார் என தேடி வந்த நிலையில் தற்போது அவரை பிடித்து ஐபிசியில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஐ.பி.சி. பிரிவுகள் 285 , 286, 336 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 285 என்பது எரியும் பொருட்கள் தொடர்பான அலட்சிய நடத்தைக்கானது. 286 பிரிவு வெடிக்கும் பொருள் தொடர்பான அலட்சியமாக செயல்படுவது.. 336 என்பது மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுவது ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.