ஒரு நாளில் ஒருமணி நேரத்தில் 4 பாலியல் சீண்டல் நடக்கும் நாட்டில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்ப கீழே இறங்க முயன்றபோது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே பகுதியில்தான் இந்த கொடூர நிகழ்வு நடந்துள்ளது. பள்ளி முடிந்தபின்னர் வீட்டுக்கு செல்ல மாணவி ஒருவர் ஆட்டோவில் ஏறி உள்ளார்.அந்த ஆட்டோ ஓட்டுனர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே தகராறு மூண்டுள்ளது. எனவே அந்த மாணவி என்னை கீழேஇறக்கி விடுங்கள், ஆட்டோவை நிறுத்துங்கள் என கூக்குரலிட்டுள்ளார்.
எனவே ஆட்டோ ஓட்டுனரும் ஆட்டோவை நிறுத்துவது போல நிறுத்தி மாணவி இறங்குவதற்கு முன்பே ஆட்டோவை இயக்கிக் கொண்டு மாணவியிடம் கையை பிடித்து இழுத்துள்ளான். பின்னர் மாணவியை தர தரவென 500 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார். இதனால்அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே துரத்திக் கொண்டு அங்கிருந்த சில ஓடினர். அதற்குள் கீழே தள்ளிவிட்டு அந்த ஓட்டுனர் தப்பிவிட்டான்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்டமாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுனரை வலை வீசி தேடி வருகின்றனர்.