fbpx

பெரும் அதிர்ச்சி : கட்டணத்தை மீண்டும் உயர்த்தியது ரயில்வே !!

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ரயில்வே நிர்வாகம் 3 வது முறையாக கட்டணத்தை உயர்த்தி இருப்பது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைக் கட்டணத்தை தீபாவளி கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக முதலில் 10 ரூபாயாக இருந்த கட்டணத்தை ரூ 20 ஆக உயர்த்தியது பின்னர் அடுத்த முறையில் 30 ரூபாயாக உயர்த்தியது ரயில்வே நிர்வாகம். தற்போது ரூ.50 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.
மும்பை ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தை குறைக்கும் வகையில் ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கு மண்டல ரயில்வே நிர்வாகம் ரூ.10லிருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் முக்கிய ரயில் நிலையங்கள் மத்திய மும்பை , தாதர், போரிவாலி , பந்த்ரா ஜங்ஷன் , வாபி , வால்சத் , உத்னா மற்றும் சூரத் ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
நடைமேடையில் கூட்டம் நிரம்பி வழிவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பயணிகள் சரியான நேரத்தில் ரயிலைப் பிடிக்கவும் இது வழி வகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

அடியோடு சாய்ந்த அயர்லாந்து அணி..!! அசரவைத்த இலங்கை அணி..!! 9 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி..!!

Sun Oct 23 , 2022
டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவில் இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, நமீபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் வெளியேறின. சூப்பர் 12 சுற்றில் […]
அடியோடு சாய்ந்த அயர்லாந்து அணி..!! அசரவைத்த இலங்கை அணி..!! 9 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி..!!

You May Like