fbpx

பிளாக்மெயில் செய்த காதலன்..! ஆணுறுப்பை வெட்டிய காதலி..! ஹோட்டலில் பரபர சம்பவம்..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன்னை பிளாக்மெயில் செய்த காதலனுக்குக் காதலி கொடுத்த வினோத தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் சிவில் லைன்ஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சனிக்கிழமையன்று 32 வயது மதிக்கத்தக்க நபரின் ஆணுறுப்பை 30 வயதுடைய காதலி வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பெண்ணை கைது செய்து விசாரிக்கையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இருவருக்கும் இடையே கடந்த ஓராண்டாகத் தான் பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இளைஞர் அந்தப் பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருமே உல்லாசமாக உடலுறவு வைத்துள்ளனர். ஆனால், அதை அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல், அந்த இளைஞன் வீடியோ எடுத்துள்ளான். அதன் பின்னர் அந்த வீடியோவை காட்டி, பெண்ணை பிளாக் மெயில் செய்யத் தொடங்கியுள்ளான். வீடியோவை இணையத்தில் லீக் செய்து விடுவேன் என்று மிரட்டி, அந்தப் பெண்ணிடம் இருந்து பலமுறை உடலுறவும் வைத்துக் கொண்டு, பணமும் பெற்றதாகக் கூறப்படுகிறது.

பிளாக்மெயில் செய்த காதலன்..! ஆணுறுப்பை வெட்டிய காதலி..! ஹோட்டலில் பரபர சம்பவம்..!

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இருவரும் அந்த ஹோட்டலில் சந்தித்துள்ளனர். அப்போது, அந்தரங்க வீடியோவை டெலிட் செய்யும்படி அந்த பெண் கெஞ்சி உள்ளார். ஆனால், அந்த நபர் இதைக் கண்டுகொள்ளவில்லை. அப்போது இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் மிக விரைவிலேயே கையை மீறிச் சென்றுள்ளது. அந்த இளைஞர் பெண்ணை தாக்கத் தொடங்கி உள்ளார். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாத அந்த பெண், அங்கிருந்த ஒரு கூர்மையான பொருளை எடுத்து இளைஞரின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார். இருப்பினும், இது தொடர்பாக இருவருமே போலீசில் புகார் அளிக்கவில்லை. இதனால், அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

பிளாக்மெயில் செய்த காதலன்..! ஆணுறுப்பை வெட்டிய காதலி..! ஹோட்டலில் பரபர சம்பவம்..!

இது தொடர்பாகக் காவலர் ஒருவர் கூறுகையில், “இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது. இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறோம். ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளோம். யாரும் புகார் தரவில்லை என்றாலும் கூட விரைவில் இந்தச் சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Chella

Next Post

ரூ.10 ஆயிரத்திற்குள் 5ஜி ஸ்மார்ட் ஃபோன்? பண்டிகை கால அதிரடி தள்ளுபடிகள்..!

Sun Sep 11 , 2022
தற்போது 10,000 ரூபாய்க்குள் 5ஜி போன்களை வெளியிடுவது கடினம் என்று சியோமியின் இந்திய தலைவர் முரளிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சியோமி (Xiaomi) நிறுவனம் ஏற்கனவே இந்தியச் சந்தையில் 5ஜி போன்களை வெளியிட்டுள்ளது. ஜியோ, ஏர்டெல் மற்றும் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வரும் மாதங்களில் 5ஜி சேவைகளை வெளியிடத் தொடங்கும் போது, வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வரவேற்பைப் பொறுத்து, பெரும்பாலான இந்திய நுகர்வோர் வாங்கக்கூடிய 5G ஃபோன்களை சியோமி சந்தைக்கு கொண்டு வர […]
ரூ.10 ஆயிரத்திற்குள் 5ஜி ஸ்மார்ட் ஃபோன்? பண்டிகை கால அதிரடி தள்ளுபடிகள்..!

You May Like