fbpx

பிஎம் கேர்ஸ் அறங்காவலர்கள் கூட்டம்..! புதிய உறுப்பினராக தொழிலதிபர் ரத்தன் டாடா நியமனம்..!

பிஎம் கேர்ஸ் நிதியத்தின் புதிய உறுப்பினர்களாக தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையில் பிஎம் கேர்ஸ் (PM CARES) அறங்காவலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், முழுமனதுடன் பங்களிப்பு செய்தவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் அதிகரித்தபோது, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி “பிஎம் கேர்ஸ்’ என்ற நிதியத்தை அறிவித்தார். இதில், பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், அரசு ஊழியர்கள், நன்கொடைகள் அளித்து வருகிறார்கள்.

பிஎம் கேர்ஸ் அறங்காவலர்கள் கூட்டம்..! புதிய உறுப்பினராக தொழிலதிபர் ரத்தன் டாடா நியமனம்..!

இந்த அறக்கட்டளையில் பிரமதர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த பிஎம் கேர்ஸ் மூலம் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வென்டிலேட்டர்கள், மருத்துவக் கருவிகள், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் என ஏராளமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பிஎம் கேர்ஸ் நிதி மூலம் 4,345 குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன.

பிஎம் கேர்ஸ் அறங்காவலர்கள் கூட்டம்..! புதிய உறுப்பினராக தொழிலதிபர் ரத்தன் டாடா நியமனம்..!

இந்நிலையில், இந்த அறக்கட்டளையில் புதிய உறுப்பினர்களாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், முன்னாள் துணை சபாநாயகர் கரியா முன்டா, தொழிலதிபர் டாடா சன்ஸ் குழுமத்தின் ஒட்டுமொத்த தலைவர் ரத்தன் டாடா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, புதிய உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுதவிர, பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு ஆலோசனைக் குழுவுக்கு உறுப்பினர்களாக முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி ராஜீவ் மெஹ்ரிஷி, இன்போசிஸ் நிறுவனத்தின் சுதா மூர்த்தி, பிராமல் நிறுவனம், மற்றும் இந்தியா கார்ப்ஸ் முன்னாள் சிஇஓ ஆனந்த் ஷா ஆகியோரை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. அறக்கட்டளைக்கு புதிதாக வந்துள்ள உறுப்பினர்கள், ஆலோசகர்கள், பரந்த சிந்தனையுடன், பிஎம் கேர்ஸ் அமைப்பு செயல்பட பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பொதுவாழ்க்கையில் புதிய உறுப்பினர்களுக்கு இருக்கும் பெரிய அனுபவம், மக்களின் பல்வேறு தேவைகளுக்கு நிதியை சிறப்பாகப் பயன்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்

Chella

Next Post

இந்த ஒரு பெயிண்ட் போதும்..! இனி வீட்டிற்கு மின்சாரமே தேவையில்லை..! சூப்பர் கண்டுபிடிப்பு..!

Wed Sep 21 , 2022
‘சோலார் பெயிண்ட்’ எனப்படும் மின்சக்தியை சேமிக்கக்கூடிய வண்ணப்பூச்சு தற்போது வைரலாகி வருகிறது. நிலக்கரி மற்றும் தண்ணீர் மூலமாக கிடைக்கும் மின்சாரம் ஆனது நிரந்தர தன்மையற்றது. எனவே, இதற்கு மாற்று ஆற்றலைத் தேடி விஞ்ஞானிகள் முதல் சாமானியர்கள் வரை நகர்ந்து வருகின்றனர். மின்சாரத்திற்கான மாற்று சக்தியைப் பொறுத்தவரை சோலார் மற்றும் காற்றாலை மூலமாக மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சோலார் பேனல்களைக் கொண்டு வீடுகள் முதல் தொழிற்சாலைகள் வரை தங்களது பயன்பாட்டிற்கு […]
இந்த ஒரு பெயிண்ட் போதும்..! இனி வீட்டிற்கு மின்சாரமே தேவையில்லை..! சூப்பர் கண்டுபிடிப்பு..!

You May Like