ஜெய்பூரில் மூதாட்டியின் கால்களை வெட்டி கொடூரமான முறையில் வெள்ளி வளையங்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ராஜஸ்தான் தலைநகரின் ஜெய்பூரில் கொள்ளையர்கள் இந்த எல்லைக்கு செல்வார்களா என்பதை இந்த கொள்ளை சம்பவம் ஒரு சான்றாக உள்ளது. 108 வயதான ஜமுனா தேவி என்ற மூதாட்டி ஒருவரிடம் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றிஉள்ளனர். வெள்ளி வளையத்தின் இணைப்பு பகுதியை நீக்க கூர்மையான ஆயுதத்தால்இரண்டு கால்களையும் முழங்காலுக்கு கீழ் வரை கொள்ளையர்கள் வெட்டினர். பின்னர் அந்த வெள்ளி நகைகளை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் ஜெய்பூரையே அதிர வைத்துள்ளது.
வீட்டியில்தனியாக இருநத மூதாட்டி தன் மகளுடன் உறங்கியுள்ளார். காலை நேரத்தில் அவரது மகள் கோயிலக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது வந்த கொள்ளையர்கள் மூதாட்டியை குளியல் அறைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர் காலில் மோதிரங்களை அகற்ற முயன்றுள்ளனர். ஆனால் அகற்ற முடியவில்லை இதனால் கூர்மையான ஆயுதங்களால் முழங்காலுக்கு கீழ் பகுதியில் இரண்டு கால்களை வெட்டினர்.
அந்த ஆயுதங்களை வீசிவிட்டு அங்கிருந்து மோதிரங்களுடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். ரத்தவெ்ளத்தில் கிடந்த மூதாட்டியை அவரது மகள் வந்து பார்த்துஅதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இது தொடர்பாக கல்தா கேட் பகுதியில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்தனர். சம்பவ இடத்தில் கிடந்த ஆயுதங்களையும் மூதாட்டியின் கால்களையும் எடுத்துச் சென்றனர். சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.