fbpx

இந்த வார்த்தையை நீங்கள் மட்டும் பயன்படுத்தலாமா? என்ன செய்யப்போகிறீர்கள் சபாநாயகர்? – எம்பி சு.வெங்கடேசன் கேள்வி

நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பயன்படுத்தியது குறித்து எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் இரு அவைகளிலும் எம்பிக்கள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டது. அதில், ஊழல், நாடகம், கபட நாடகம், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், முதலைக் கண்ணீர் உள்ளிட்ட வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த வார்த்தையை நீங்கள் மட்டும் பயன்படுத்தலாமா? என்ன செய்யப்போகிறீர்கள் சபாநாயகர்? - எம்பி சு.வெங்கடேசன் கேள்வி

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு பற்றி விவாதம் நடந்தது. அப்போது தமிழில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல்-டீசல் விலையை தமிழக அரசு குறைக்காதது முதலைக் கண்ணீர் வடித்த கதை, என்று பேசியிருந்தார். முதலைக் கண்ணீர் என்ற வார்த்தை தடை செய்யப்பட்டிருந்த நிலையில், அதை மத்திய அமைச்சரே பேசியிருக்கிறாரே என்று சுட்டிக் மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”முதலைக்கண்ணீர் என்ற சொல் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நேற்று பேசிய நிர்மலா சீதாராமன் இந்த சொல்லை அழுத்தந்திருத்தமாக பயன்படுத்தினார். என்ன செய்யப்போகிறீர்கள் சபாநாயகர்” சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Chella

Next Post

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை எப்போது தொடங்கப்படும்..? மத்திய அமைச்சர் சொன்ன தகவல்...

Wed Aug 3 , 2022
‘புல்லட் ரயில்’ திட்டத்தின் வேகமாக நடைபெற்று வருவதாக என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் புல்லட் ரயில் 2026 ஆம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என்று வைஷ்ணவ் அறிவித்தார். இந்த புல்லட் ரயில் திட்டத்தின் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இத்திட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.. மேலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக நாட்டின் […]

You May Like