fbpx

’தினமும் அது இல்லாம இருக்க முடியல’..!! கணவனின் செயலால் மனைவி செய்த சம்பவம்..!!

மது குடிப்பதை கைவிட மறுத்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பீர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வினய் ராஜ் (27). இவரது மனைவி ராதா. இந்நிலையில் வினய்க்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார். இதனை, அவரது மனைவி ராதா கண்டித்துள்ளார். மேலும், மது குடிக்கும் பழக்கத்தை கைவிடுமாறும் கூறியுள்ளார். ஆனால், வினய், மனைவியின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து மது குடித்து வந்ததால், நேற்று முன்தினம் கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

’தினமும் அது இல்லாம இருக்க முடியல’..!! கணவனின் செயலால் மனைவி செய்த சம்பவம்..!!

இதையடுத்து, வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மனைவி ராதா, வீட்டில் இருந்த ஆயுதத்தை கொண்டு கணவரை சரமாரியாக குத்திக்கொலை செய்துவிட்டு, காவல் நிலையத்தில் தனது கணவரை யாரோ கொலை செய்துவிட்டதாக நாடகமாடினார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வினய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மனைவி ராதாவிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, ராதாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

Chella

Next Post

தமிழக அரசின் ’நம்ம ஸ்கூல்’ திட்டம்..!! அரசுப் பள்ளிகளில் இப்படி ஒரு வசதியா..?

Mon Dec 19 , 2022
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ‘நம்ம ஸ்கூல்’ என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 32 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியார் பங்களிப்பையும் இணைத்து ‘நம்ம ஸ்கூல்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் […]

You May Like