மாநில அரசின் சார்பில் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப மத்திய அரசு தடைவிதித்துள்ள நிலையில் மத்திய அரசின் கீழ் கல்வி தொலைக்காட்சி இயங்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, மாநில அரசு சார்பில் இயங்கி வரும் கல்வி தொலைக்காட்சிக்கு தடை விதித்துள்ளது. மாநில அரசு சார்பில் இனி கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பப்படாது. இனி கல்வி தொலைக்காட்சி மத்திய அரசின் கீழ் பிரசார்பாரதி வாயிலாக இயங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு நடத்தி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் கார்பரேஷன் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநில அரசின் பல்வேறு உரிமைகளை மத்திய அரசு அபகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல ஆண்டு காலமாக இந்த குற்றச்சாட்டு தொடர்ந்து வருகின்றதாக புகார் எழுந்துள்ளது. பா.ஜ. ஆட்சிக்கு வந்து மருத்துவக் கல்வி நீட் தேர்வின் மூலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளது. இதுபோல பல உரிமைகள் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசு கொரோனா போன்ற நெருக்கடியான காலத்தை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு தடையற்ற கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வி தொலைக்காட்சி என்ற திட்டத்தை தொடங்கியது.
கடந்த அதிமுக ஆட்சியின் போது தொடங்கப்பட்ட திட்டமாகும். இதே போல கேபிள் டிவி உரிமையையும் மாநில அரசு கையில் வைத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்வி தொலைக்காட்சிதான் தற்போது குறி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்டு 20ல் முதல் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது , வேலை வாய்ப்பு மற்ற மாணவர்களின் திறனை ஊக்குவிப்பது போன்ற பல நிகழ்ச்சிகள் இந்த கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
கல்வியில் திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கான கல்வி தொடர்பான கலந்துரையாடல்கள் நுழைவுத் தேர்வு குறித்த சந்தேகங்கள் , விளக்கங்கள் மற்றும் கல்வியாளர்கள், ஆசிரியர்களின் நேர்காணல்கள் , உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் போன்றவை அதில் , இடம் பெற்று வருகின்றது. மாணவர்களுக்காக மேலும் பல நிகழ்ச்சிகள் அதில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பபட்டு வருகின்றது. இந்நிலையில் மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும் மற்றும் சேவை வினியோகம் செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் ஒளிபரப்பப்பட்டு வரும் சேனல்கள் இனி பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு தமிழ்நாடு அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி இனி மத்திய அரசின் கீழ் இயங்கும் என்ற நிலை உருவாகி உள்ளது