fbpx

அரசு பஸ்களை மின்சார பஸ்களாக மாற்ற மத்திய அரசு முடிவு!,. போக்குவரத்து அமைச்சர் தகவல்..!

கர்நாடக சட்டசபையில் கேள்வி நேரத்தில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் தன்வீர்சேட் கேட்ட கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீராமுலு பதிலளிக்கையில் கூறியதாவது;-

கர்நாடகத்தில் வருகிற 2030-ஆம் வருடத்திற்குள் அனைத்து அரசு பேருந்துகளும் மின்சார பேருந்துகளாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 35 ஆயிரம் அரசு பேருந்துகள் உள்ளன. மின்சார பேருந்துகளாக மாற்ற தேவையான உதவிகளை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்து வருகிறார். மின்சார பேருந்துகளாக மாற்றுவதால் செலவு குறையும் மேலும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக பெங்களூருவில் 90 மின்சார பேருந்துகளின் சேவை ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 12 வருடங்களுக்கு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 64 ரூபாய் செலவாகிறது. ஸ்மார்ட் திட்டத்தில் மொத்தம் 300 மின்சார பேருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது 90 பேருந்துகள் இயங்குகின்றன. மீதமுள்ள பேருந்துகள் படிப்படியாக போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்படும். மேலும் 921 மின்சார பேருந்துகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.

Baskar

Next Post

உக்ரைனில் எம்.பி.பி.எஸ். படித்த மாணவர்கள் …. இந்தியாவில் படிப்பை தொடர முடியாது.. !

Thu Sep 15 , 2022
உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஊர் திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவப் படிப்பை தொடர முடியாது என்று மத்திய அரசு தனது முடிவை தெரிவித்துள்ளது. உக்ரைனில் போர் தொடங்கியதை அடுத்து அந்நாட்டில் படித்துக் கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் நாடு திரும்பினர். கிட்டத்தட்ட 20,000 மாணவர்கள் உக்ரைனில் இருந்து திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் உக்ரைன் நாட்டுக்கு திரும்பிச் சென்று படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலேயே […]

You May Like