மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக சிலிகுரி அருகே உள்ள செவோக் விமான தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜல்பைகுரியில் தேர்தல் பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, பக்தோக்ரா விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பைகுந்த்பூர் வனப்பகுதி வழியாக ஹெலிகாப்டர் சென்றபோது அந்த பகுதியில் மோசமான வானிலை நிலவியது. இதன் காரணமாக ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து, மம்தா பானர்ஜி பாக்டோக்ரா விமான நிலையத்திற்கு சாலை வழியாகச் சென்று அங்கிருந்து கொல்கத்தாவுக்கு விமானத்தில் செல்ல முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. பஞ்சாயத்து தேர்தலுக்காக மாநிலத்தின் வடபகுதியில் பல்வேறு இடங்களில் முதல்வர் பானர்ஜி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 8ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்காக மம்தா பானர்ஜி பேரணி நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.