fbpx

இண்டிகோ விமானத்தில் ’கரப்பான்பூச்சி’ மன்னிப்பு கோரியது விமான நிறுவனம்..

இண்டிகோ விமானத்தில் இசையமைப்பாளர் கரப்பான்பூச்சி இருந்ததை வீடியோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்டதை தொடர்ந்து விமான நிறுவனம் மன்னிப்புகோரியுள்ளது.

இசையமைப்பாளர் ரிக்கி கெஜ் , பாட்னாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தபோது கரப்பான்பூச்சி இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை வீடியோ எடுத்த இசையமைப்பாளர் ரிக்கி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் டுவீட் செய்துள்ளார்.

’’ அக்டோபர் 13ம் தேதி பாட்னாவிலிருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது ஒரு கரப்பான் பூச்சியும் பயணம் செய்தது. அநேகமாக அதற்கு இண்டிகோ வழங்கிய உணவும் காம்ளிமென்ட்ரியாக கிடைத்திருக்கும் ’’ என டுவீட் செய்திருந்தார் .

இதையடுத்து உடனடியாக இண்டிகோ நிறுவனம் பதில் அளித்துள்ளது. சில நேரங்களில் விமானத்தின் உள் பகுதியில் எவ்வளவு சுத்தம் செய்தாலும் ஏதாவது ஒரு வழியில் வந்துவிடுகின்றன. நீங்கள் இது போன்ற அனுபவத்தை எதிர்கொண்டதற்கு நாங்கள் வருந்துகின்றோம். இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். மேலும் ஏதாவது அசாதாரணமான சூழலை நீங்கள் உணர்ந்தால் எங்கள் குழுவினரை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம். என பதில் அளித்திருந்தது.

விமானங்கள் எப்போதும் ஒவ்வொரு முறை டேக் ஆஃப் செய்வதற்கு முன்பும் சுத்தம் செய்யப்படும் என குறிப்பிட்டிருந்தனர்.

அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிக்கி கெஜ் … பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மே மாதம்’’ குடியேற்றத்தின் விதிமுறைகளை ’’ குற்றம்சாட்டியிருந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளதாகவும்சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னாள் இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது எனவும் கூறி குடியேற்ற செயல்முறைகளை சீரமைக்க ஆலோசனைகளையும் அவர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Next Post

கொசுக்களை பிடிப்பதில் தீவிரம் காட்டும் சுகாதாரத்துறை …!

Sat Oct 15 , 2022
கொசுக்கள் எங்கிருந்தாலும் மூலை முடுக்குகளில் தேடித் தேடி கொசுக்களை வேட்டையாடி சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஊரெங்கும் டெங்கு காய்ச்சல் பரவுவதை ஒட்டி அறிவயல் பூர்வமாக உத்திக் கொண்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக கொசுக்களை பிடித்து பி.சி.ஆர் சோதனை நடத்தி வருகின்றனர். டெங்கு நோய் ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் மூலமாக பரவுகின்றது. எனவே அதைப் பிடித்து வைரஸ் இருக்கின்றதா என பி.சி.ஆர் சோதனை செய்து வருகின்றனர். […]

You May Like