தனது வாழ்க்கையை கலைக்காகவே அர்ப்பணித்து வந்த நீல்பவன் பருவா காலமானார். அவருக்கு வயது 86
அசாம் மாநிலத்தின் புகழ்பெற்ற கலைஞர் நீல்பவன் பருவா. இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கௌகாத்தியில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவர், கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் இருந்தே அவரது உடல்நிலை மோசமடைந்தது. இவருடைய மனைவி திபாலி போர்தாகூர். இவர் ஒரு பிரபல பாடகி. நீல்பவன் பருவா, அசாம் மாநிலம் ஜோர்ஹாட் மாவட்டத்தில் தியோக் அருகே உள்ள தமுலிசிங்க கிராமத்தில் பிறந்தார். இவர் நவீன கலைச் சொற்பொழிவுக்கு மகத்தான பங்களிப்பை கொடுத்தவர்.
1968இல் சாந்திநிகேதனில் நுண்கலைகளில் முறையான பட்டம் பெற்றவர். தனது கலைப் பரிசோதனைகளால் கலைத் துறையில் ஒரு புதிய திசையை ஏற்படுத்திக் கொடுத்தார். 1971இல் கௌகாத்தியில் அஸ்ஸாம் ஃபைன் ஆர்ட்ஸ் & கிராஃப்ட்ஸ் சொசைட்டியை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றியவர். 2022இல் கலை மற்றும் கலாச்சாரத்திற்காக அசாம் அரசின் உயரிய சிவிலியன் விருது அசோம் சவுரவ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.