கொரோனா மருந்துகள் உள்ளிட்ட அனைத்து மருந்துகளின் போதுமான இருப்பை உறுதி செய்ய மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எஃப். 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு மற்றும் முகக்கவசம் என பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா மருந்து நிறுவனங்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், சூழலை உன்னிப்பாக கண்காணிக்கவும் கொரோனா மருந்துகள் உள்ளிட்ட அனைத்து மருந்துகளின் போதுமான இருப்பை உறுதி செய்யவும் மருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.