fbpx

இளம்பெண் தற்கொலை வழக்கில் கோர்ட் அதிரடி: கணவருக்கு பத்து ஆண்டுகள் ஜெயில் தண்டனை.!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி (32). இவர் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் லட்சுமி பிரசன்னா(26) என்பவருக்கும் கடந்த 2012-ஆம் வருடம் திருமணம் நடந்தது. அதன் பின்னர் இவர்கள், சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தனர். திருமணத்தின்போது குமாரசாமிக்கு வரதட்சணையாக, 100 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 5 ஏக்கர் நிலம் ஆகியவை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு மனைவியை குமாரசாமி துன்புறுத்தியுள்ளார். மேலும், மனைவியை வீட்டில் பூட்டி வைத்தும் சித்ரவதை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த லட்சுமி பிரசன்னா, 7.10.2013 அன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வேளச்சேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குமாரசாமியை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் இருக்கும் மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. காவல்துறையினர் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஆரத்தி பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, குமாரசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு 10 வருடம் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Rupa

Next Post

’நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு’..! உயர்நீதிமன்ற கிளையில் சவுக்கு சங்கர் வாதம்

Thu Sep 15 , 2022
சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி தனது தரப்பு […]
’நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு’..! உயர்நீதிமன்ற கிளையில் சவுக்கு சங்கர் வாதம்

You May Like