மதுரையில் இருந்து மாட்டுச்சாணம் ஏற்றுமதி மிகப் பெரிய அளவில் நடைபெற்று நல்ல வருமானத்தை ஈட்டிக்கொடுத்துள்ளதாக வேளாண் தொழில்முனைவோர் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
மாலத்தீவில் ஒரு டன் மாட்டுச் சாணம் ரூ.7,000 என்ற கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக மதுரையில் உள்ள வேளாண் தொழில்முனைவோர் பாதுகாப்பு மையத்தில் இருந்து மாதத்திற்கு 50 டன் மாட்டுச்சாணத்தை மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மதுரை நபார்டுவங்கியின் கீழ் மதுரை வேளாண் தொழில்முனைவோர் பாதுகாப்பு மையம் உள்ளது இதில் தொழுவம் உழவர்உற்பத்தியாளர் என்ற நிறுவனத்தில் 90 ஆயிரம் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் 750 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினமும் 120 டன் வரை சாணம் கிடைக்கின்றது. கேரளாவில் ஒரு டன் சாணம் ரூ.3,500க்கு ஏற்றுமதியாகின்றது. தமிழ்நாட்டில் முதல் முதலாக மாலத்தீவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 50 டன் சாணம் அனுப்பப்பட்டது. ஒரு டன் ரூ.7000க்கும் அனுப்பப்படுகின்றது. இது மாதம் தோறும் 50 டன் சாணம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதை விரிவுபடுத்த உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாட்டுச்சாணத்தை வைத்து மாலத்தீவு என்ன செய்கின்றது? : மாட்டுச்சாணத்திலிருந்து உரம் மற்றும் எரு போன்றவை தயாராவது பொதுவான ஒரு விஷயம் இது மட்டும் இல்லாமல் கிடை மாட்டுச் சாணத்தில் இருந்து ஊது பத்தி , விபூதி , சாம்பிராணி , விளக்கும் , பூச்சிக்கொல்லி போன்ற பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான மூலப்பொருள் மாட்டுச்சாணம் என்பது குறிப்பிடத்தக்கது.