சமாஜ்வாதி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கொடூரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் காவலர், பெண் ஒருவரை கொடூரமாக தாக்குவது தெரிகிறது. அதாவது உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் எஸ்ஐ ஒருவர் பெண்ணை வலுக்கட்டாயமாக அறைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார். அப்போது அந்த பெண் முரண்டு பிடித்ததால் எஸ்ஐ அவரை கொடூரமாக அடித்து தாக்கியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.