fbpx

வாடிக்கையாளர்களே..!! இனி யாரும் பணம் கொடுக்காதீங்க..!! அதையும் மீறி கேட்டால் புகார் அளிக்கலாம்..!! மத்திய அரசு அதிரடி..!!

சமையல் கேஸ் சிலிண்டர் குறித்து மத்திய அரசு முக்கிய அறிவுரை ஒன்றை பொதுமக்களுக்கு வழங்கியிருக்கிறது.

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில், இப்போது வரை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. கடந்த மாதமாவது சிலிண்டர் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தக்காளி, அரிசி விலைதான் உயர்ந்தது. இதற்கிடையே, சிலிண்டர் விலையையும் சேர்த்து, சிலிண்டரை டெலிவரி செய்யும் நபர்களுக்கும் பணம் தர வேண்டியுள்ளது. டெலிவரி கட்டணம் என்று ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்று கூட பலருக்கு தெரிவதில்லை. சிலிண்டர் விலையை விட, கூடுதலாக 50 ரூபாய் கேட்கிறார்கள் டெலிவரி மேன்கள். ஆனால், இவர்களுக்கு எப்போதுமே பணம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை.

டெலிவரி கட்டணம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கமும் உள்ளது. நீங்கள் சிலிண்டரை புக்கிங் செய்தால், உங்கள் வீட்டிற்கே அந்த சிலிண்டரை டெலிவரி செய்வது ஏஜென்சியின் பொறுப்பாகும். HPCL நிறுவனம் கொடுத்துள்ள விளக்கத்தின்படி, டெலிவரி செய்யும் சமயத்தில் பணம் எதுவும் கேட்கப்பட்டால் கொடுக்கத் தேவையில்லை. அப்படி கேட்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் தரலாம். டெலிவரி மேனுக்கு கொடுக்கும் அந்த கட்டணமானது, நாமாகவே விருப்பப்பட்டு தருவது. அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி கட்டாயப்படுத்தினால், தாராளமாக வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கலாம்.

ஆனால், இப்போது வரை, டெலிவரி மேனுக்கு பணம் தரப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இது அனைத்து மாநிலங்களிலுமே நடக்கிறது. இந்நிலையில், மத்திய அரசு ஒரு அட்வைஸ் தந்துள்ளது. இதுதொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் ஒரு அறிக்கை விடுத்துள்ளது. அதில், ”சிலிண்டர் எடுத்து வரும் ஊழியர்களிடம் ரசீதில் உள்ள தொகையை தவிர, வாடிக்கையாளர் கூடுதல் பணம் தரக்கூடாது. சிலிண்டரை வீட்டு வாசலில் விநியோகம் செய்வது கட்டாயமாகும். கேஸ் ஏஜென்சிகளுக்கு சென்று சிலிண்டர் எடுக்கும்போது, அதற்குரிய டெலிவரி தொகையை ஏஜென்சிகளிடம் இருந்து பெற்று கொள்ளலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

விற்பனைக்கு வரும் விஜய் டிவி..!! ரூ.1,000 கோடி கொடுத்து விலைக்கு வாங்கும் பிரபல நிறுவனம்..!!

Thu Aug 3 , 2023
மிகவும் பிரபலமான சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோ மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. சன் டிவிக்கு நிகரான இடத்தை விஜய் டிவி தக்க வைத்துக் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட இந்த தொலைக்காட்சியை தற்போது திடீரென்று விற்பதற்கு முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு காரணம் இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு டிஆர்பி ரேட்டிங் கிடைக்காததால் தான் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட ரேட்டிங்க்கு […]

You May Like