டியூசனுக்கு சென்ற பதினோறு வயது சிறுமி என்று கூட பார்க்காமல் 58 வயது கிழவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே என்ற பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி வழக்கம் போல டியூசன் சென்றுள்ளார். அந்த சிறுமியை அழைத்துச் செல்ல ஆசிரியர் தினமும் வருவார். ஆனால் அன்றைய தினம் சற்று தாமதமாகியுள்ளது. நீண்ட நேரம் காத்திருந்தபோது அருகில் ஒரு கட்டிடத்தின் வாட்ச்மேனாக 58 வயதான ஒரு நபர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
’’பாப்பா ’ இங்க என்ன செய்ற , இது ஆபத்தான பகுதி வா உன்னை பாதுகாப்பா ஒரு இடத்துல உட்கார வைக்கின்றேன் என கூறி அழைத்துக் கொண்டு யாரும் இல்லாத இடத்திற்கு சென்றுள்ளார். உன் டீச்சர் வரும் வரை நீ இங்கே இரு என பேச்சு கொடுத்துக் கொண்டே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்துள்ளார். சிறிது நேரத்தில் டீச்சர் வந்ததும் சிறுமியை விடுவிக்க தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதுள்ளார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து அந்த வாட்ச் மேன் கைது செய்யப்பட்டார்.
நாட்டில் 16 வயதிற்குள்பட்ட சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும். தண்டனை அதிகரிக்கின்றதே தவிர குற்றங்கள் குறைந்தபாடில்லை.