fbpx

இந்த வங்கியில் தப்பி தவறிக்கூட வீட்டுக் கடன் வாங்கிடாதீங்க!!! வங்கிகளில் அதிகரித்த வட்டி விகிதம்…

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (ரெபோ ரேட்) 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ரெபோ ரேட் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்களில் வட்டிவிகிதம் அதிகரித்தது. எஸ்பிஐ வங்கி முதல் பிஎன்பி வங்கி வரை பல வங்கிகள் வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்களை கடந்த அக்டோபர் 1முதல் அதிகரித்து இருக்கிறது.

அதன்படி எஸ்பிஐ வங்கியானது அக்டோபர்-1,2022 முதல் அமலுக்கு வந்துள்ள வட்டி விகிதம் இபிஎல்ஆர் 8.55% மற்றும் ஆர்எல்எல்ஆர் 8.15% ஆகும். பிஎன்பி(punjab national bank) வங்கியானது தற்போது வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் 7.70%லிருந்து 8.40% ஆக உயர்த்தியுள்ளது. பேங்க் ஆப் பரோடா வங்கியும் அதன் வட்டியை 8.45% ஆக உயர்த்தியுள்ளது. இதில் அதிகபட்சமாக வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ வங்கி 9.25% உயர்த்தியுள்ளது, இந்த உயர்வு செப்டம்பர் 30 முதல் ஐசிஐசிஐ வங்கியில் அமலுக்கு வந்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டது. இனிமேல் வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவோர் இந்த வட்டி விகிதத்தை பார்த்து வாங்கினால் நல்லது.

Kathir

Next Post

’கஜினி 2’ அப்டேட்..!! 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்..!! சூர்யாவுடன் கைக்கோர்க்கும் பிரபல இயக்குநர்..?

Sun Oct 9 , 2022
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் சூர்யாவுடன் ‘கஜினி 2’ படத்திற்காக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தீனா’, ‘ரமணா’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்து தமிழின் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இணைந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், பின்னர் சூர்யாவுடன் கைக்கோர்த்து ‘கஜினி’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் கடந்த 2005ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சூர்யா – அசின் காட்சிகள் இளைஞர்களை ஈர்த்தது. இப்படம் […]
’கஜினி 2’ அப்டேட்..!! 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்..!! சூர்யாவுடன் கைக்கோர்க்கும் பிரபல இயக்குநர்..?

You May Like