ஆந்திர மாநிலம் திருப்பதி –காணிப்பாக்கம் இடையே இயக்கப்படும் மின்சார பேருந்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்தில் 5 ஆண்டுகளாக பேருந்துகளில் டீசல் எஞ்சினை மாற்றி முழு மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக திருப்பதி – காணிப்பாக்கம் இடையே பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பணியில் கர்நாடக மாநிலம் , பெங்களூருசை் சேர்ந்த ’வீரவாகனா ’ என்ற பேருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. 5 ஆண்டுகள் பழமையான டீசல் எஞ்சினை மாற்றி இந்த பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மின்சார பேருந்திற்கு ஏற்ப பேருந்து மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளுது. இதற்கு கடந்த மே மாதம் திருப்பதி பணிமனையில் மின்சார பேருந்து , சாலையில் இயக்க தேவையான அனுமதி பெற்று பதிவு செய்யும் முறைகள் நிறைவானது. இதையடுத்து திருப்பதி – காணிப்பாக்கம் வழித்தடத்தில் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகின்றது. படிப்படியாக பின்னர் அடுத்த கட்டமாக அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். காணிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் உள்ளது. திருப்பதி செல்லும் பக்தர்கள் காணிப்பாகம் சென்று விநாயகரையும் வழிபட்டு வருவார்கள். எனவே அவர்களுக்கு இது வரப்பிரசாதம் என கூறலாம்.