சாத்துக்குடி ஜுஸ் குடிங்க ரத்தம் நல்லா ஊறும்னு டாக்டர் சொல்லி கேட்டிருப்போம் . ஆனா, ரத்த பிளாஸ்விற்கு பதிலா ரத்த வங்கி சாத்துக்குடி ஜுஸ் வழங்கியத பார்த்துள்ளீர்களா ? .. அப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் இந்தியாவில் தான் நடந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. இதனால் ரத்தத்தில் உள்ள பிளேட்டெலட்களின் தேவை அதிகரித்ள்ளது. இதை காரணமாக வைத்து போலி ரத்த வங்கிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளன.
அலகாபாத்தை சேர்ந்தவர் பிரதீப் பாண்டே . இவர் ரத்த பிளாஸ்மா என்ற பெயரில் ரத்த வங்கியில் இருந்து ஒரு பாக்கெட்டை வாங்கி வந்துள்ளார். ரத்த பிளாஸ்மாவின் நிறமும் , சாத்துக்குடி ஜுஸ் நிறமும் ஒரே மாதிரி இருப்பதால் போலி வங்கிகள் இவ்வாறு பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளேட்லெட் தேவை உளள நிலையில் பிரயாக் ராஜ் ஜல்வா பகுதியில் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரதீப் பாண்டேவுக்கு பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜுஸ் ஏற்றப்பட்டது. இதனால் முறையான சிகிச்சை இல்லாமல் அவர் உயிரிழந்தார். இதை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோவாக டுவிட்டரில் பதிவிட்டுளு்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் ரத்த வங்கி போலியானது எனவுமட் அதை சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை இயக்குனர் ராகேஷ்தெரிவித்துளளார். உத்தரபிரதேச்தின் துணை முதல்வர் ப்ரஜேஷ் பதக் , டெங்கு நோயாளிக்கு பிளாஸ்மா விநியோகிப்பது பற்றி விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக கூறி உள்ளார்.