fbpx

பாஜகவில் இணைகிறார் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்..! திடீர் முடிவுக்கு என்ன காரணம்..?

பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங், வரும் 19ஆம் தேதி பாஜகவில் இணைய உள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான அமரீந்தர் சிங், இரு முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இவர், பாஜகவின் அருண் ஜெட்லியை எதிர்த்துப் போட்டியிட்டு ஒரு லட்சத்து 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2015ஆம் ஆண்டு பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். இவரது தலைமையில் 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இதையடுத்து, இவர் முதலமைச்சர் பதவி ஏற்றார்.

பாஜகவில் இணைகிறார் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்..! திடீர் முடிவுக்கு என்ன காரணம்..?

காங்கிரஸ் கட்சியில் இணைந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் அமரீந்தர் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக, பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே, இவர் முதல்வர் பதவியில் இருந்து விலகும்படி நேர்ந்தது. இதனால், அதிருப்தி அடைந்த அமரீந்தர் சிங், கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். நவம்பர் 2ஆம் தேதி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து 2022 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டார். பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 28 தொகுதிகளில் இவரது கட்சிப் போட்டியிட்டது. எனினும், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

பாஜகவில் இணைகிறார் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்..! திடீர் முடிவுக்கு என்ன காரணம்..?

இந்நிலையில், லண்டன் சென்று முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அமரீந்தர் சிங், சமீபத்தில் நாடு திரும்பினார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தார். அப்போது, பாஜகவில் தான் இணைவது குறித்தும், தனது கட்சியை பாஜகவில் இணைப்பது குறித்தும் அவர் பேசியுள்ளார். இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் வரும் 19ஆம் தேதி அமரீந்தர் சிங் பாஜகவில் இணைய உள்ளதாக பஞ்சாப் லோக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரித்பால் சிங் பாலியாவால் தெரிவித்துள்ளார்.

அம்ரிந்தர் சிங்கோடு, பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு முன்னாள் எம்பி, 7 முன்னாள் எம்எல்ஏக்கள் அன்றைய தினம் பாஜகவில் இணைய உள்ளதாகவும், கட்சியை இணைக்கும் விழா அடுத்த வாரம் சண்டிகரில் நடைபெறும் என்றும், அப்போது கட்சியின் மற்ற பொறுப்பாளர்கள் பாஜகவில் இணைவார்கள் என்றும் பிரித்பால் சிங் பாலியாவால் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

மகளின் இறப்பில் சந்தேகம்..! 2-வது உடற்கூராய்வு கோரி மகளின் உடலை 44 நாட்கள் பாதுகாத்த பெற்றோர்..!

Fri Sep 16 , 2022
தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி வந்த பெற்றோர், 2-வது பிரேத பரிசோதனை செய்யக்கோரி மகளின் உடல் மீது உப்பைக் கொட்டி 44 நாட்களாக பாதுகாத்து வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பார் பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவரின் உடல் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், மகளின் இறப்பில் சந்தேகம் […]
மகளின் இறப்பில் சந்தேகம்..! 2-வது உடற்கூராய்வு கோரி மகளின் உடலை 44 நாட்கள் பாதுகாத்த பெற்றோர்..!

You May Like