கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுனில் கவாஸ்கரின் தாயார் மீளாள் காலமானார். அவருக்கு வயது 95.
உலக டெஸ்ட் வரலாற்றில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என்று பெயரெடுத்த கவாஸ்கர், 125 டெஸ்ட போட்டிகளில் பங்கேற்று 10,122 ரன்களை கடந்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 236 ரன்கள் குவித்துள்ளார். 34 சதம் மற்றும் 45 அரை சதங்களை விளாசியுள்ளார். இவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு ஐசிசியின் ஹால் ஆஃப் பேமராக அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவரது தாயார் மீளாள் காலமானார். அவருக்கு வயது 95. சுனில் கவாஸ்கர் இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட் போட்டிக்கு வர்ணனையாளராக இருந்த போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து, அவர் உடனடியாக நாடு திரும்பினார்.