ஒடிசாவில் 45 வயதான நபரின் குடலில் இருந்த எவர் சில்வர் கிளாஸை மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மூலம் அகற்றினர்.
குஜராத்தின் சூரத்தில் 45 வயதான கிருஷ்ணா ரௌத் பணிபுரிந்து வருகிறார். 10 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொண்டார். பார்ட்டியின் போது, போதையில் இருந்த அவரது நண்பர்கள் எவர்சில்வர் கிளாஸ் ஒன்றை கிருஷ்ணாவின் ஆசனவாயில் சொருகியுள்ளனர். அடுத்த நாளிலிருந்து கிருஷ்ணாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.. எனினும் இதனை அவர் தனது குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்கவில்லை. வலி தாங்க முடியாமல் சூரத்தை விட்டு வெளியேறி ஒடிசாவில் உள்ள தனது கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அவர் தனது கிராமத்தை அடைந்தபோது, வயிற்றில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.. மேலும், அவரால் மலம் கழிக்க முடியவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில், ஒடிசாவின் பெர்ஹாம்பூர் நகரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எக்ஸ் ரே பரிசோதனையில் அவரின் குடலில் கிளாஸ் இருப்பது கண்டறியப்பட்டது..
முதலில் மலக்குடல் வழியாக கண்ணாடியை எடுக்க மருத்துவர்கள் முயன்றனர். இருப்பினும், அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்ததால், கிருஷ்னாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர்…
மருத்துவமனையின் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் பேராசிரியர் சரண் பாண்டாவின் ஆலோசனையின் பேரில், உதவிப் பேராசிரியர் சஞ்சித் குமார் நாயக், டாக்டர் சுப்ரத் பரல், டாக்டர் சத்யஸ்வரூப் மற்றும் டாக்டர் பிரதீபா ஆகியோர் அடங்கிய டாக்டர்கள் குழு அறுவை சிகிச்சை செய்தது. அவர்கள் குடலை வெட்டி கிளாஸை அகற்றினர்.. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த நபர் குணமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.