குதூப்மினாரில் விநாயகர் சிலைகள் பல ஆண்டுகளாக பாதுகாப்பதற்காக போடப்பட்ட இரும்பு வலைகள் அகற்றப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று குதூப்மினார். இதில் விநாயகர் சிலைகள் காணப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு குத்புதீன் ஐபக் மசூதி உருவாக்குவதற்காக 27 இந்து மற்றும் ஜெயின் கோவில்களை அழித்ததாக கூறப்படுகின்றது. இதனால் குதுப்மினார் வளாகத்தில் உள்ள விநாயகர் சிலைகள் மீட்டெடுக்க தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையம் ஏ.எஸ்.ஐ. (இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை ) இடம் கூறியிருந்தது. விநாயகர் சிலைகளை அகற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போடப்பட்டிருந்தது. ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நீதிமன்றம் தற்போதைய நிலையை தொடருமாறு உத்தரவிட்டது.
யுனஸ்கோ உலக பாரம்பரிய தளமான குதூப்மினாரில் பல ஆண்டுகளுக்கு முன்பு இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிலைகள் சேதம் ஏற்படாமல் இருக்க இரும்புக் கம்பி வேலி அமைக்கப்பட்டது. தற்போது ஏ.எஸ்.ஐ. அதனை அகற்றி விநாயகர் சிலைகள் நன்றாக தெரியும்படி வைத்துள்ளது. மேலும் குண்டு துளைக்காத கண்ணாடி பேழை அமைத்துள்ளது. இரண்டு சிலைகளும் ஒன்று உல்டா கணேஷ் எனவும் , கூண்டில் விநாயகர் எனவும் அழைக்கப்படுகின்றன.
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் காணப்படும் ஷ்ருங்கள் கௌரி கடவுள் சிலைக்கு வழிபாடு நடத்த உரிமை பெற நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் கண்ணாடிப்பேழைக்குள் உள்ளவாறு விநாயகர் சிலையை பார்வையிடமுடியுமே தவிர பூஜை செய்யவோ வேறு எந்த செயலுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த கூண்டுக்குள் உள்ள சிலை கவிழ்ந்த நிலையில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் நிமிர்ந்து இருப்பது தெளிவாக இருப்பதாக ஏ.எஸ். ஐ . அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.