fbpx

தற்காலிக அரசு பணியார்களுக்கு இனிப்பான செய்தி !!!..

தற்காலிகமாக அரசு பணியில் வேலை பார்ப்பவர்களுக்கும் போனஸ் அறிவித்துள்ளது மத்திய அரசு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசுகள் மற்றும் போனஸ் அறிவிப்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்திதிறன் இல்லா போனஸ்களை ( அட்-ஹாக்) போனஸ் எனப்படும் மத்திய அரசு போனஸ் அறிவித்துள்ளது. 2021-2022நிதியாண்டிற்கான தற்காலிக போனஸ் செலுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமான தொகை ஆகும்.
அக். 6 .2022ல் வெளியிடப்பட்ட அறிக்கை நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்து இருக்கின்றது. உற்பத்தி திறன் இணைக்கப்பட்ட ஊக்கத்திட்டத்தின் கீழ் பயன்பெறாத பணியாளர்கள் உற்பத்தி திறன் – இணைக்கப்படாத போனசை பெறுவதற்கு தகுதி உடையவர்கள் அனைத்து குரூப் பி,அரசிதழில்லாத பணியாளர்கள் மற்றும் குரூப் சி மத்திய அரசு ஊழியர்களுக்கு , உற்பத்தி அல்லாத இணைக்கப்பட்ட போனஸ் கிடைக்கும்.
தற்காலிக போனஸ் கொடுப்பனவுகளுக்கான மாதாந்திர ஊதியக் கணக்கீடு வரம்பு ரூ.7000 ஆக இருக்கும் என நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப்படைகளின் தகுதி வாய்ந்த உறுப்பினர்களுக்கும் , நியாயப்படுத்த ஊக்கத் தொகைகள் கிடைக்கின்றன.
இதில் கூடுதலாக மத்திய அரசின் ஊதிய முறையைப் பின்பற்றும் யூனியன் பிரதேசத்தின் அரசுப் பணியாளர்களுக்கு இந்த போனஸ் கிடைக்கும். ஆனால் , அவர்களுக்கு வேறு எந்த போனஸ் அல்லது கருணைத் திட்டங்களால் பயனடையக் கூடாது.

Next Post

நாளை இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைபெய்யும்...

Sat Oct 22 , 2022
நாளை தமிழ்நாடு , புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை தென்கிழக்கு ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் போர்ட் பிளேர்க்கு, மேற்கு வடமேற்கு திசையில் 110 […]

You May Like