fbpx

பெரும் சோகம்..!! சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்..!! பிரபலங்கள் இரங்கல்..!!

கேரள அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் டி.பி.ராஜீவன் காலமானார். அவருக்கு வயது 63.

நாவலாசிரியர், கவிஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் டி.பி.ராஜீவன் நேற்றிரவு காலமானார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோழிக்கோடு பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரியான இவர், முந்தைய காங்கிரஸ் கூட்டணி (யுடிஎப்) அரசாங்கத்தின் போது கலாச்சார அமைச்சரின் ஆலோசகராகவும் பணியாற்றினார். கவிதைகள், பயணக்கட்டுரைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள டி.பி. ராஜீவன் திரைக்கதை எழுத்தாளரும் கூட.

பெரும் சோகம்..!! சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்..!! பிரபலங்கள் இரங்கல்..!!

இவர் எழுதிய ‘பலேரிமாணிக்கம் ஒரு பத்திரகோலப் பதாகத்திண்டே கதை’ நாவல் அதே பெயரில் திரைப்படமாகவும், ‘கே.டி.என். கொட்டூர்- எழுத்தும் ஜீவிதவும்’ நாவல் ‘நியம்’ என்ற பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. அவர் 1959ஆம் ஆண்டு பிறந்தவர். ‘கே.டி.என். கொட்டூர்- எழுத்தும் ஜீவிதவும்’ நாவலுக்காக 2014இல் கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றார். அவர் அமெரிக்காவில் லெட்டிக் ஹவுஸ் பெல்லோஷிப் மற்றும் ராஸ் பெலோ பவுண்டேஷன் பெல்லோஷிப் ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

Chella

Next Post

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை!! என்ன நடக்கும் தெரியுமா? கடுமையாக்கப்படும் சட்டம். !!

Thu Nov 3 , 2022
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.அதன்படி குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படுகின்றது. ஆனால் அதையும் மீறி குடிபோதையில் வாகனம் ஓட்டும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால், இதை தடுக்கும் பொருட்டு தற்போது சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அபராத சீட்டு பெற்றுக் கொண்டு அபராதத் தொகையை செலுத்தாமல் வாகன ஓட்டிகள் டிமிக்கி […]

You May Like