துனிஷா ஷர்மா தற்கொலை வழக்கில் “என் மகளை மதமாற்றம் செய்ய வற்புறுத்தினான்” என அவரது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மும்பையில் நடந்த தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் கடந்த 24ஆம் தேதி சீரியல் நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் வனிதா ஷர்மா அளித்த புகாரின் பேரில், துனிஷாவின் காதலரும் சக நடிகருமான ஷீசன் முகமது கான் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஷீசனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். இதற்கிடையே, கடந்த 27ஆம் தேதி உடற்கூறு ஆய்வுக்கு பின், துனிஷா சர்மாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, துனிஷா மற்றும் ஷீசனின் மொபைல் உரையாடல்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், இறந்த துனிஷாவின் தாயார் வனிதா ஷர்மா “ஷீசன் என் மகளை இஸ்லாம் மதத்தை பின்பற்ற சொல்லி வற்புறுத்தினான்.

மேலும், ஹிஜாப் அணியவும் கட்டாயப்படுத்தினான். படப்பிடிப்பு தளத்தில் போதைப் பொருளை ஷீசன் பயன்படுத்தினான். தற்கொலையின் போது ஷீசன் முதலில் ஆம்புலன்ஸை அழைக்கவில்லை. என் மகளை அவன் கொலை செய்துள்ளான். இதனால் ஷீசன் தண்டிக்கப்படும் வரை நான் அமைதியாக இருக்கமாட்டேன்” என பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.