fbpx

சிறப்பான பிரதமராக பணியாற்றி வருகிறார்…. பிரதமர் மோடிக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் பாராட்டு..!

அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு டிவி நிகழ்ச்சிக்கு அளித்தப் பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியா குறித்து பாராட்டி பேசியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவுக்கு என்னை விட நல்ல நண்பன் இருந்ததில்லை என்று கருதுகிறேன். பிரதமர் மோடியுடனும், இந்தியாவிடமும் எனக்கு நல்ல உறவு இருந்து வந்துள்ளது.

நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்தவர். அவர் சிறப்பாக அவரதுபணிகளை செய்து வருகிறார். அவருக்கு கிடைத்திருக்கும் பொறுப்பு எளிதானது இல்லை. நாங்கள் ஒருவொருக்கொருவர் நீண்ட காலமாக தெரிந்து இருக்கிறோம் என்றார். மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டிருக்கிரீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் கூறிய பதில்;- நான் போட்டியிட வேண்டும் என்றே எல்லோரும் விரும்புகின்றனர். தேர்தல்களிலும் நான் முன்னிலை வகிக்கிறேன். எனவே விரைவில் இது பற்றி நான் முடிவு எடுப்பேன் என்றார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடுவாரா என்ற விவாதங்கள் நடந்துவரும் நிலையில் அவரது இந்தப் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Rupa

Next Post

திருடப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு … 60 ஆண்டுகளுக்கு முன்னர் சிலை திருட்டு சம்பவம் …

Thu Sep 8 , 2022
தஞ்சாவூரில் திருடப்பட்ட மூன்று சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோயில் கிராமத்தில் உள்ள சவுந்தராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது ஸ்ரீதேவி , விஷ்ணு, காளிங்க நார்த்தனர் கிருஷ்ணன். 3 ஐம்பொன் சிலைகள் . இந்த சிலைகள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த 3 சிலைகளையும் வெளிநாட்டுக்கு கடத்தி விற்றது பின்னர் தெரியவந்தது. கடந்த 2020ம் ஆண்டில் ராஜா […]

You May Like