fbpx

சூரிய கிரகணம் எப்படி தெரியும் ?

சூரிய கிரகணம் நடைபெற உள்ளநிலையில் இதனை எந்தெந்த பகுதிகளில் பார்க்கலாம் என்பதை பார்க்கலாம்..

பூமி, சந்திரன் , சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் நடைபெறும் போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கின்றது.
இன்று மாலை 4 மணிக்கு சூரியகிரகணம் நிகழவுள்ளது. ரஷ்யாவின் தெற்கு பகுதிகள், கஜகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை காணலாம். உலக அளவில் சூரிய கிரகணம் 14:19 மணிக்கு தொடங்கி 18:32 மணிக்கு முடியும். ரஷ்ய நாட்டின் மத்திய பகுதிகளில் சூரியனை 80 விழுக்காடு சந்திரன் மறைக்கும்.
இந்தியாவில் மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் கண்டுகளிக்க முடியும். அதிக நேரம் இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்படும். அதிகபட்சமாக குஜராத் மாநில துவாரகாவிலும், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் குறைந்தபட்சமாக 12 நிமிடங்களும் இந்த சூரிய கிரகணம் தென்படும்.
மும்பை , புனே , டெல்லி , தானே, அகமதாபாத் , சூரத் , ஜெய்பூர்,, இந்தூர் , போபால் , லூதியானா , ஆக்ரா , சண்டிகர் , உஜ்ஜெயின் மதுரா , போர்பந்தர் , காந்திநகர் , சில்வாசா பனாஜி ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக சூரியகிரகணம் தென்படுகின்றது.
கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. தொலைநோக்கி அல்லது படச்சுருள்களைக் கொண்டு பார்க்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூரிய வெளிச்சத்தை குறைக்கும் தன்மையுடைய கண்ணாகளை நாம் அணிந்து கொண்டு சூரியனை பார்க்கலாம். அல்லது சூரியனின் பிம்பத்தை ஒரு வெண் திரையில் விழச் செய்து அதை பார்க்கலாம்.
தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னை, கோவை, ஊட்டி , ஐதராபாத் , விசாகபட்டினம்ட , பாட்னா, பெங்களூரு திருவனந்தபுரம் , மங்களூரு , கான்பூர் ,லக்னோ , நாக்பூர் , வாரணாசி , ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும்.சென்னையில் 5.14 மணிக்கு தொடங்கி 5.50 மணிக்கே முடிந்துவிடும், அதிகபட்சம் 8 விழுக்காடு மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும்.

Next Post

மக்களே உஷார்..!! பழுது நீக்குவதற்காக சிம் கார்டுடன் செல்போனை கொடுத்த நபர்..!! ரூ.2 லட்சம் அபேஸ்..!!

Tue Oct 25 , 2022
செல்போனை சிம் கார்டுடன் சர்வீஸ் செய்ய கொடுத்துச் சென்ற நபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் கதம் (40). இவர் வைத்திருந்த செல்போனில் சில நாட்களாக ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதனால், அதனை சரி செய்ய அந்த பகுதியில் இருந்த தனக்கு அறிமுகமில்லாத கடையில் பழுதுநீக்குவதற்காக கொடுத்துள்ளார். அந்த கடையில் இருந்தவர் மறுநாள் […]
மக்களே உஷார்..!! பழுது நீக்குவதற்காக சிம் கார்டுடன் செல்போனை கொடுத்த நபர்..!! ரூ.2 லட்சம் அபேஸ்..!!

You May Like