வடக்கு டெல்லி, ஜஹாங்கிர்பூர் பகுதியில் வசித்து வருபவர் சேத்ராம். இவருக்கு இவரது மனைவிக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், திருப்புளியால் மனைவியின் உடலில் பல இடங்களில் குத்தி கணவன் சேத்ராம் கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், மனைவியின் அந்தரங்க இடங்களில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

ஆனாலும், ஆத்திரம் அடங்காமல் மனைவியின் மூக்கை கடித்து துப்பி உள்ளார் சேத்ராம். இதையடுத்து, உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு, வலியால் துடித்த சேத்ராமின் மனைவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கு முன்னதாகவே மனைவி உடன் ஏற்பட்ட தகராறில் அவரை தாக்கியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சேத்ராம், கடந்த வாரம் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், மீண்டும் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.