fbpx

’எனக்கு கல்யாணம் வேண்டாம்’..!! ’குழந்தைகள் மட்டும் போதும்’..!! திருமணமாகாமல் 2 குழந்தைகளுக்கு தாயான பெண்..!!

40 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம் நான்புரா பகுதியில் 40 வயதுடைய டிம்பிள் தேசாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். ஆனால், அவருக்கு திருமணத்தில் துளியும் நாட்டமில்லை என்றாலும், குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார்.

’எனக்கு கல்யாணம் வேண்டாம்’..!! ’குழந்தைகள் மட்டும் போதும்’..!! திருமணமாகாமல் 2 குழந்தைகளுக்கு தாயான பெண்..!!

இதனையடுத்து, அவர் அதே பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு சென்று செயற்கை கருத்தரித்தல் முறையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், முதல் 2 முயற்சிகள் தோல்வி அடைந்தது. இதையடுத்து, 3-வது முயற்சியில் அவர் கருவுற்றுள்ளார். தற்போது அவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால், அவர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். மேலும், அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Chella

Next Post

தமிழகத்தில் மட்டும் 755 தன்னார்வ தொண்டு பதிவு ரத்து...! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.‌‌...!

Sun Dec 18 , 2022
தமிழகத்தில் 755 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் FCRA பதிவு ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் 2017 மற்றும் 2021 க்கு இடையில் 6,677 NGO-களின் FCRA பதிவு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதாக மாநிலங்களவையில் எழுத்து பூரவமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், என்ஜிஓக்களின் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010ன் கீழ், விதிகளை மீறியதற்காக பதிவு ரத்து செய்யப்பட்டது. இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் […]

You May Like