fbpx

’இப்போதான படுத்தேன் அதுக்குள்ள கூவுதே’..!! சேவலால் எரிச்சலாகி காவல்துறையை நாடிய மருத்துவர்..!!

அக்கம்பக்கத்தில் அதிகம் ஒலி வைத்து பாட்டு கேட்டால், ஏதேனும் பிரச்சனை நடந்தால் போலீசிடம் புகார் கொடுப்பது வழக்கம். ஆனால், நித்தமும் கூவும் பக்கத்து வீட்டுக்காரரின் சேவலால் எரிச்சலான ஒருவர் காவல்துறையை நாடியிருப்பது மத்தியப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது.

அதன்படி, இந்தூரின் பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் மருத்துவமனை அருகே வசித்து வருகிறார் மருத்துவர் அலோக் மோடி. அவரது புகாரில், ”எனது அண்டை வீட்டில் உள்ள ஒரு பெண் ஒருவர் கோழி, சேவல் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். அந்த கோழிகள் தினமும் அதிகாலை தவறாது 5 மணிக்கெல்லாம் கூவுகிறது. இதனால் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்ற போது சேவல் கூவி தூக்கத்தை கலைத்து விடுகிறது. அது முற்றிலும் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது” என கூறியுள்ளார். அலோக் மோடியின் புகாரை பலாசியா காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சய் சிங் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

’இப்போதான படுத்தேன் அதுக்குள்ள கூவுதே’..!! சேவலால் எரிச்சலாகி காவல்துறையை நாடிய மருத்துவர்..!!

அதனடிப்படையில், முதலில் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் சேவல் கூவும் சிக்கலை தீர்க்க குற்றவியல் நடைமுறையை பின்பற்றுவோம் என்றும், பொது இடத்தில் சட்டவிரோதமாக தொந்தரவு செய்வது என்ற சட்டப்பிரிவு 133ன் படி நடவடிக்கை எடுப்போம் என்றும் சஞ்சய் சிங் கூறியிருக்கிறார்.

Chella

Next Post

SBI வங்கியில் பல்வேறு காலிப்பணியிடங்கள்... டிசம்பர்-12, கடைசி நாள்! உடனே விண்ணப்பியுங்கள்...

Thu Dec 1 , 2022
பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி. அதன்படி வட்ட ஆலோசகர், கடன் ஆய்வாளர், மேலாளர் மற்றும் பிற துறைகளில் மொத்தம் 65 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய […]

You May Like